/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நள்ளிரவில் பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி
/
நள்ளிரவில் பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி
நள்ளிரவில் பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி
நள்ளிரவில் பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீஸ் உதவி
ADDED : நவ 18, 2025 06:35 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்ல பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீசார் பணம் உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் சிறப்பு எஸ்.ஐ., நல்லதம்பி, வெங்கடேசன், ஏட்டு தீபன், சின்னராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். நள்ளிரவு 12:00 மணிக்கு பஸ் நிலைய பட்டாணி கடை வாசலில் பெண் ஒருவர் இரு சிறுவர்களுடன் நின்றார். போலீசார் விசாரித்தபோது, அப் பெண் அரியலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வீடு திரும்பியதாகவும், சொந்த ஊருக்கு செல்ல பஸ் இல்லை. ஆட்டோவில் செல்ல ரூ. 400 கேட்கிறார்கள். என்னிடம் பணம் இல்லா ததால் நிற்கிறேன் என தெரி வித்தார்.
நள்ளிரவு நேரத்தில் இங்கு நிற்க கூடாது என கூறிய சிறப்பு எஸ்.ஐ., நல்லதம்பி, ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்து குமராட்சி அடுத்த கீழக்கரையில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நள்ளிரவு பணம் இன்றி தவித்த பெண்ணுக்கு போலீசார் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

