ADDED : நவ 25, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29; இவர், தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி வீட்டு வீட்டிற்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர், கடலுார் முதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

