ADDED : நவ 25, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: நல்லுார் ஒன்றிய பா.ம.க., செயற்குழு கூட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நல்லுார் இளையராஜா, மங்க ளூர் கோபி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி வரவேற்றார்.
மாநில அமைப்பு தலைவர் திருமாவளவன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். மாவட்ட துணைச் செயலர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் மஞ்சமுத்து , நிர்வாகிகள் செந்தில் ராஜா, தங்கதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
கிளைகள் தோறும் பூத் கமிட்டி அமைப்பது, வீடுகள் தோறும் சென்று திண்ணை பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

