/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
/
இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
ADDED : டிச 06, 2024 05:56 AM
நடுவீரப்பட்டு : மாயமான கல்லுாரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மணப் பாக்கத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் மகள் பிரவீனா, 19; பாலுாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மற்றொரு சம்பவம்
குறிஞ்சிப்பாடி அடுத்த நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பஞ்சமாதேவி, 36; குழந்தை இல்லாததால், சி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த இவர் கடந்த 26ம் தேதி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
நடுவீரப்பட்டு போலீ சார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.