/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவருக்கு கத்தி குத்து போலீசார் விசாரணை
/
முதியவருக்கு கத்தி குத்து போலீசார் விசாரணை
ADDED : நவ 22, 2024 06:11 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் வயிற்றில் கத்தியால் குத்தி காயமடைந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுபாக்கம் அடுத்த காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 56. இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்புற திண்ணையில் படுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மகாலிங்கத்திற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் செல்வராசு, 52, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செல்வராசு, கத்தியால் மகாலிங்கத்தின் வயிற்றில் குத்தினார். காயமடைந்த மகாலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.