/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை
/
வாய்க்காலில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 19, 2025 07:24 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வாய்க்காலில் வாலிபர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு மண் ரோடு அருகே பொலாந்துறை வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று மாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இதில் இறந்து கிடந்தவர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லுாரைச்சேர்ந்த சன்மார்க்கம்,40; என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரித்ததில் இறந்து போன சன்மார்க்கத்திற்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை ஏதும் இல்லை.
இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்த சன்மார்க்கம்,கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு திரும்பி வந்து வேலையில்லாமல் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக மனைவி பிரிந்தசென்ற நிலையில் அடிக்கடி குடி போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.