/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 11, 2025 03:31 AM
கடலுார்:கடலுார் அருகே வீட்டின் பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மோகன சுந்தரி. இவர் கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஜூலை மாதம் வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு தனது கணவர் யுவராஜூடன் சென்றார்.
சிகிச்சை முடிந்து தன் தாய்வீடான முத்துகிருஷ்ணாபுரம் சென்றுவிட்டார். பின்னர் தாய்வீட்டில் இருந்து திரும்பி பள்ளிப்பட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்தது.
பீரோவின் மேல் வைக்கப்பட்ட சாவியை எடுத்து திறந்து அதற்குள் இருந்த 28 கிராம் எடையுள்ள தங்க நகை திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு சாவியை பயன்படுத்தி திறந்து நகையை திருடி இருப்பது தெரியவந்தது. போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.