ADDED : செப் 25, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: பணம் வைத்து சூதாடியவர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.
ஒரத்துார் சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, வெள்ளிக்குடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அங்கு நின்ற 6 பைக்குகள் மற்றும சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.
