தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நகராட்சி துாய்மை பணி பரப்புரையாளர்களுக்கு பயிற்சி

நகராட்சி துாய்மை பணி பரப்புரையாளர்களுக்கு பயிற்சி

நகராட்சி துாய்மை பணி பரப்புரையாளர்களுக்கு பயிற்சி


ADDED : செப் 25, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம், செப். 26–

மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் உள்ள தூய்மை பணி பரப்புரையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

நெல்லிக்குப்பம், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம், பண்ருட்டி, திட்டகுடி நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணி பரப்புரையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்தது.

பயிற்சி வகுப்பை சேர்மன் ஜெயந்தி துவங்கி வைத்தார். 9 வது வார்டு பங்களா தெருவில் குப்பையை தரம் பிரிக்கும் நேரடி செயல்விளக்க பயிற்சி நடந்தது. துப்புரவு ஆய்வளர் கேசவன் பயிற்சி வழங்கினார். அப்போது குப்பையை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகைகளாக பிரித்து வாங்க வேண்டும். இதுபற்றி மக்களிடம் விளக்கி அவர்களே குப்பையை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்த வேண்டும்.

வரும் அக்டோபர் 1 ம் தேதி முதல் வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும். இதை மக்களிடம் வலியுறுத்தி குப்பை இல்லாத நகரமாக மாற்ற உதவ வேண்டுமென கூறினார்.

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தினர். கமிஷனர் ஜீவிதா, கவுன்சிலர் சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us