/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலுாரில் போலீசார் சோதனை
/
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலுாரில் போலீசார் சோதனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலுாரில் போலீசார் சோதனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலுாரில் போலீசார் சோதனை
ADDED : ஆக 14, 2025 12:36 AM

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமானோர் போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்.
இதேப் போன்று, சிதம்பரம், விருத்தாசலம், வடலுார், பண்ருட்டி, திட்டக்குடி என மாவட்டம் முழுதும் வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.