ADDED : நவ 27, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில், டிஜிட்டல் பேனர், சரிந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் மேல வீதி, நகரகாவல் நிலையம் எதிரில், அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில், போலீசார் அனுமதியின்றி, 30 அடி உயரத்தில், மெகா சைஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததது. நேற்று காலை, திடீரென பேனர் சரிந்து விழுந்தது.
இதனை பார்த்த போலீசார் உடனடியாக மின் துறைக்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை நிறுத்தம் செய்தனர். பின் பேனர் அகற்றப்பட்டது. அப்பகுதியில், அரை மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது அந்த பேனரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகரில் பல்வேறு இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

