/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் சாவில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
வாலிபர் சாவில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஆக 02, 2025 07:05 AM

சேத்தியாத்தோப்பு : மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புவனகிரி அடுத்த பு.உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்,32; எம்.எஸ்.சி., பட்டதாரி. கடந்த 20ம் தேதி சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து பு.உடையூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். புவனகிரி சாலை, மிராளூர் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
பின், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
சிகிச்சை முடிந்து கடந்த 28ம் தேதி பார்த்திபன் வீடு திரும்பினார். மீண்டும் உடல்நிலை பாதித்து, 30ம் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இந்நிலையில், பார்த்திபன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று அவரது பெற்றோர், உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அப்போது, அங்கிருந்த எஸ்.பி., ஜெயக்குமார், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
பார்த்திபன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரியும் பார்த்திபனின் தந்தை பன்னீர்செல்வம், எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.