UPDATED : நவ 26, 2026 07:28 PM
ADDED : நவ 26, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: தொழிலாளியை தாக்கிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புவனகிரி அடுத்த மஞ்சக்கொள்ளை வள்ளலார் நகரை சேர்ந்தவர் பாலகுரு,50; தொழிலாளி. இவர், கடந்த 19ம் தேதி பெருமாத்துார் அருகே பெட்டிக்கடையில்பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆதிவராகநத்தம்மாதாக்கோவில் தெருவை சேர்ந்த பிரவீன் மற்றும் கண்ணன் இருவரும் குடி போதையில், பாலகுருவை ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கினர்.
அதில், படுகாயமடைந்த பாலகுரு புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, பிரவீன், கண்ணணை தேடிவருகின்றனர்.
