ADDED : நவ 26, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் நாளை 28ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி கடலுாரில் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை தாங்கி, வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார். செயலாளர் சுபாஷ் பாபு வரவேற்றார். நடராஜன், செல்வராஜன், தர்மலிங்கம் வாழ்த்திப் பேசினர். திருஞானம் நன்றி கூறினார்.
