/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை ஆசாமி குத்தியதில் போலீஸ்காரர் படுகாயம்
/
போதை ஆசாமி குத்தியதில் போலீஸ்காரர் படுகாயம்
ADDED : ஜன 13, 2025 01:01 AM
கடலுார்: கடலுார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி அருகே, நேற்று முன்தினம் குடிபோதையில் வாலிபர் ஒருவர் உடைந்த பீர் பாட்டிலால் பொதுமக்களை அச்சுறுத்தினார்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீஸ்காரர்கள் விநாயகமூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் அவரிடம் விசாரித்தனர்.
போதையில் இருந்த அவர், நெல்லிக்குப்பம் அடுத்த சரவணபுரத்தை சேர்ந்த தினேஷ் ராஜா, 32, என, தெரிந்தது.
அவரது கையில் இருந்த பீர் பாட்டிலை போலீஸ்காரர்கள் பறிக்க முயன்ற போது, தினேஷ்ராஜா கையில் இருந்த பீர் பாட்டிலால், போலீஸ்காரர் விநாயகமூர்த்தி வயிற்றில் குத்தினார்.
காயமடைந்த விநாயகமூர்த்தி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போதையில் இருந்த தினேஷ் ராஜா கீழே விழுந்ததில் காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடலுார் புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.