/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி
/
போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி
ADDED : ஆக 05, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பிச்சாவரத்தில் போலீசாரின் பிள்ளைகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சிதம்பரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில், ஏராளமான போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். போலீசாரின் பிள்ளைகள் 80 பேரை பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்திற்கு அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஏற்பாடு செய்து அழைத்து சென்றார்.
அங்கு, சுரபுண்ணை காடுகள், இவற்றின் முக்கியத்துவம் குறித்து வனத்துறை காவலர் முத்துக்குமார் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, படகு சவாரி செய்து, சதுப்பு நிலக்காடுகளின் இயற்கை அழகை ரசித்தனர். இதனால், போலீசாரின் பிள்ளைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.