ADDED : அக் 27, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : திட்டக்குடியில் உலக போலியோ தடுப்பு மற்றும் ஒழிப்பு தினத்தையொட்டி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திட்டக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளி தாளாளர் சிவகிருபா தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் சீனிவாசன், ராமர், பேரணியை துவக்கி வைத்தனர். ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் போலியோ விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, வதிஷ்டபுரத்திலிருந்து பள்ளி வளாகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
பள்ளி முதல்வர் அய்யாதுரை, ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் செல்வராஜ், பிரபு, இனியன், கதிரவன், சண்முகசுந்தரம் சதீஷ்குமார், தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.