/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பு
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பு
ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பு
ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 17, 2025 06:54 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் சட்டசபை தொகுதி, 288வது ஓட்டுச்சாவடிக்குட்பட்ட தே.மு.தி.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல், தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் பாலா, மகேஷ் முன்னிலை வகித்தனர்.
நகர துணைச் செயலாளர் இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், ஜெயராஜ், பச்சமுத்து, முத்து, சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், விருத்தாசலம் ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.