/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.என்.டி.என்., முதியோர் இல்லத்தில் பொங்கல் விளையாட்டு பரிசளிப்பு விழா

ADDED : ஜன 22, 2024 12:57 AM

கடலுார் : கடலுார் எம்.என்.டி.என்., அன்னை அலமேலு முதியோர் இல்லத்தில், முதியோர் மற்றும் மகளிர் நடத்தும் 57 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, முதியோர் இல்ல உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகி ஸ்ரீமதி ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் அருண் தம்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மேலும், முதியோர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கி, தென்னங்கன்று நட்டார். கூட்டுறவு நகர் சங்க தலைவர் அழகர் தேவனேசன், லயன்ஸ் உமாசங்கர், பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவர் சரவணன், ரியல் எஸ்டேட் உரிமையாளர் சக்திவேல் மற்றும் தொழிலதிபர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டாள் நன்றி கூறினார்.