ADDED : ஜன 14, 2025 07:39 AM

கடலுார்; கடலுார் ரோட்டரி கிளப் சார்பில், திருவந்திபுரம் ஊராட்சிஅலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ரோட்டரி கிளப் மூத்த உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்க தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள் திருவந்திபுரம் நாராயணன், பில்லாலி ஸ்ரீராம் வாழ்த்துரை வழங்கினர். பவானி மசாலா ஜெய்சங்கர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவில் திருவந்திபுரம், பில்லாலி ஊராட்சியைச் சேர்ந்த துாய்மைப்பணியாளர்கள், ஊழியர்கள் நுாறுபேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் கடலுார் ரோட்டரி கிளப்பின் மூத்த நிர்வாகிகள் டாக்டர் ஸ்டான்லிசந்திரன், டாக்டர் கேசவன், வழக்கறிஞர் அருளப்பன், தமிழரசன், ஜெயக்குமார், பாலகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.