ADDED : ஜன 09, 2026 05:54 AM

சிதம்பரம்: சிதம்பரம், அம்பலத்தாடி மடத்தெரு ரேஷன் கடையில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி முன்னிலை வகித்தனர். செயலாட்சியர் பாலமுருகன் வரவேற்றார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'தமி ழகத்தில் 2.75 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இந்த பணியை ஆய்வு செய்கிறோம்,'என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மல்லிகா, கூட்டுறவு சங்க பொது மேலாளர் அண்ணாதுரை, உதவி மேலாளர் செந்தில்குமார், இன்ஜினியர் சுரேஷ், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், கவுன்சிலர்கள் மணிகண்டன், சுதாகர், லதா, சரவணன், சுதாகுமார், வளர்மதி, தாரணி, அசோக், புகழேந்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர குமார், மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

