sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பொங்கல் பானைகள் தயாரிப்பு பணி 'ஜரூர்'

/

 பொங்கல் பானைகள் தயாரிப்பு பணி 'ஜரூர்'

 பொங்கல் பானைகள் தயாரிப்பு பணி 'ஜரூர்'

 பொங்கல் பானைகள் தயாரிப்பு பணி 'ஜரூர்'


ADDED : ஜன 09, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் அதிகளவு கிராமங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகை அன்று கிராமங்களில் வசித்து வருபவர்கள் தங்களது வீட்டின் வாசலில் குடும்பத்துடன் மண் பானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

வேலை காரணமாக வெளியூர் சென்றவர்களும் பொங்கல் பண்டிகைக்கு தமது சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர்.

நகர பகுதியில் பாத்திரங்களில் பொங்கலிட்டு பூஜை செய்தாலும், கிராமங்களில் பாரம்பரிய முறையை பின்பற்றி வரு கின்றனர். ஆகையால் மண் பானைகளுக்கு இன்றளவும் மவுசு உள்ளது.

அதுபோல் மாட்டுப்பொங்கல் அன்று விவசாயிகள் தங்களது வீட்டில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நடுவீரப் பட்டு, சி.என்.பாளைய மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானைகளை தயாரித்து விற்பனைக்காக சூளையிட தயாராக வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ளதால் மண் பானைகள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us