/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏழை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
ஏழை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 02, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தமிழ் கருமாரத் தெருவில் பழமையான ஏழை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 30ம் தேதி காலை 2 மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹூதி தீபாராதன முடிந்து, கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து காலை 9.30 மணிக்கு விமானம், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
பூஜைகள் சென்னை மகாலிங்கம் குருக்கள் தலைமையில் செய்தனர்.

