தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அஞ்சல்துறை மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்

அஞ்சல்துறை மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்

அஞ்சல்துறை மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்


UPDATED : நவ 07, 2026 04:54 PM

ADDED : நவ 07, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:54 PM ADDED : நவ 07, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்களுக்கு அஞ்சல்துறை மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சேவையை எளிமைப்படுத்தியுள்ளது.

கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆண்டு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக இனி அலுவலகங்களுக்கு மீண்டும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய அஞ்சல்துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாயிலாக ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லத்தில் மின்னணு உயர்வாழ்சான்றிதழ், ஜீவன் பிரமாண் இணையதளத்தில் சமர்ப்பிக்கும் வசதியை வழங்கி வருகிறது.

இச்சேவையை மத்திய, மாநில, அரசு பாதுகாப்பு துறை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு மின்சார வாரியம் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் கைரேகை அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது பேஸ் ஆர்.டி., செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லத்தில் இருந்தபடியே தங்கள் பகுதியை சேர்ந்த அஞ்சல் ஊழியர் அல்லது அஞ்சல் பட்டுவாடா பணியாளரின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் பெறலாம். அதில் இ.பி.எப்.ஓ. பி.எஸ்.என்.எல் மற்றும் பாதுகாப்பு துறை ஓய்வூதியதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ஓய்வூதிய தொகை தடையின்றி தொடர்ந்து வழங்க, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us