/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்
/
அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்
ADDED : ஏப் 17, 2025 04:58 AM

கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவை சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
கடலுார் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாம் சித்திரை திருவிழா என்ற பெயரில் நேற்று 15 முதல் 30ம் தேதி வரை நடப்பதாக, கண்காணிப்பாளர் கணேஷ் அறிவித்தார்.
அதன்படி, கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் அமைந்துள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் இம்முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
முகாமில், புதிய ஆதார் பதிவு, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் பெயர், முகவரி,மொபைல் எண் போன்ற திருத்தங்கள் மற்றும் கைரேகை, புகைப்படம் புதுப்பிக்கப்படுகிறது.
இதேபோன்று, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களில் உள்ள பார்சல் கட்டும் சேவை மையங்களிலும், அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாமும் துவங்கியது.