ADDED : பிப் 15, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க கோட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் துரை முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ஹபிபுர் ரகுமான், மாநில உதவி பொருளாளர் விஷ்ணுவிஜயன், ஓய்வுபெற்ற துணைச் செயலாளர் சண்முகம் உட்பட திட்டக்குடி, வேப்பூர், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம் வட்டார அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதில், சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் இலக்கு நிர்ணயம் செய்து ஊழியர்களை மிரட்டும் விரோத போக்கை கைவிட வேண்டும்.
பயணப்படி, தினப்படி கொடுக்காத சட்டவிரோத செயல்களை நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

