ADDED : அக் 12, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் 8 மையங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.
இதில், கடலுார், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 9,108 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், பாத்திமா, இன்பேண்ட், சாரதா, சரஸ்வதி மெட்ரிக் பள்ளிகள் உட்பட 8 மையங்களில் தேர்வு நடந்தது.
தாசி ல்தார்கள் அரவிந்தன், செல்வமணி ஆகியோர் அடங்கிய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.