தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி


UPDATED : அக் 12, 2026 04:59 PM

ADDED : அக் 12, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 04:59 PM ADDED : அக் 12, 2026 04:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், கோழி வளர்ப்பு குறித்து உள்வளாக பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, கோழி வளர்ப்பின் முக்கியத்துவம், பொருளாதார நிலையை உயர்த்துவது குறித்து பேசினார். கடலுார் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வெங்கடபதி, கோழிப்பண்ணை துவங்கும் முன் கவனிக்க வேண்டியவை, கோழிகள் தேர்வு, வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, நாட்டுக்கோழி வளர்ப்பின் சிறப்பு குறித்து விளக்கமளித்தார்.

மேலும், கோழியின் வகைகள், அதன் சிறப்பு இயல்புகள் மற்றும் புரக்கடை வளர்ப்பின் தரம், நோய் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பேராசிரியர்கள் சத்யநாரயணன், சுஜெய்வேலு, கலைச்செல்வி, கமலக்கண்ணன், சிவசங்கர் உட்பட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us