/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் 7 மணி நேரத்திற்கு மேல் மின்தடை
/
உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் 7 மணி நேரத்திற்கு மேல் மின்தடை
உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் 7 மணி நேரத்திற்கு மேல் மின்தடை
உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் 7 மணி நேரத்திற்கு மேல் மின்தடை
ADDED : பிப் 21, 2024 08:49 AM
தியாகதுருகம்,: தியாகதுருகம் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் 7;00 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமின்றி மக்கள் அவதியடைந்தனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து உளுந்துார்பேட்டை வழியே தியாகதுருகம் துணை மின் நிலையத்திற்கு உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. நேற்று மதியம் 2:45 மணிக்கு வாழவந்தான் குப்பம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் தியாகதுருகம் மற்றும் நாகலுார் துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்சாரம் தடைப்பட்டது. தகவல் அறிந்து சென்ற மின் ஊழியர்கள் உடனடியாக அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10:00 மணியை கடந்தும் பழுது சரி செய்வதில் தாமதமானது.
இதையடுத்து மாற்று ஏற்பாடாக கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
50க்கும் மேற்பட்ட கிராமங்கள் 7;00 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமின்றி இருளில் மூழ்கியதால், மக்கள் அவதிப்பட்டனர்.