ADDED : செப் 11, 2026 08:05 PM
கடலுார்: தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைப் பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். பிரசார செயலாளர் கண்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் சங்கர், மணிகண்டன், ஸ்ரீதர், நக்கீரன், குருச்சந்திரன், தாமோதரன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின் உற்பத்தி, துணை மின் நிலையங்கள், விநியோகப்பிரிவு ஆகியவற்றை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் 10,000 பேர் பணி அமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
