/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
/
மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
ADDED : அக் 05, 2024 04:06 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் காற்றில் மின்கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பலத்த காற்று,இடி மின்னலுடன் மழை பெய்தது.கைலாசநாதர் கோவில் பகுதியில் இருந்த மின்கம்பம் பலத்த காற்றில் கீழே விழுந்தது.இதனால் நகர பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.தகவலறிந்த மின்வாரிய உதவி பொறியாளர்கள் பிரபு,ரமேஷ் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி மின்கம்பத்தை சரி செய்தனர்.
பின் அதிகாலை 2.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.மின்சாரம் துண்டிக்கபட்டதால் கொசு கடியால் மக்கள் துாங்க முடியாமல் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.மின்சாரம் வழங்கிய பிறகே நிம்மதியாக துாங்கச் சென்றனர்.