/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மானிய விலையில் பவர் டில்லர்; விவசாயிகள் பயன்பெறலாம்
/
மானிய விலையில் பவர் டில்லர்; விவசாயிகள் பயன்பெறலாம்
மானிய விலையில் பவர் டில்லர்; விவசாயிகள் பயன்பெறலாம்
மானிய விலையில் பவர் டில்லர்; விவசாயிகள் பயன்பெறலாம்
ADDED : டிச 17, 2024 06:49 AM
கடலுார்; கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 4000 பவர் டில்லர் மற்றும் 4000 பவர் வீடர் கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டுக்கு மானிய விலையில் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடலுார் மாவட்டத்திற்கு, 51 பவர் டில்லர், 59 பவர் வீடர் வழங்கப்படுகிறது.
பொது பிரிவினரை சேர்ந்த விவசாயிகளுக்கு பவர் டில்லர் பெற அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய், பவர் வீடருக்கு 63 ஆயிரம் ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவிகித கூடுதல் மானியம், பொது பிரிவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு பவர் வீடர் வாங்கும்பொழுது கூடுதலாக 10 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தகம் நகல், புகைப்படம், சிறு குறு விவசாய சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கடலுார், சிதம்பரம், விருத்தாசலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களையும், வட்டார அளவில் உள்ள பொறியாளர்களையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.