/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 12, 2025 06:59 AM

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர் கோவில் உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில், காலை 10:00 மணிக்குசுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அபிேஷகம் நடந்தது. பகல் 2:30 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
மாலை 4:00 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.