/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
அருணாச்சலா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 11, 2025 01:42 AM

புவனகிரி: புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 40 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை இந்தாண்டும் தக்க வைத்துள்ளனர்.
பள்ளி அளவில் மாணவி திவ்யதர்ஷினி 589 மதிப்பெண், மாணவர் புவனேஸ்வரன் 585 மதிப்பெண், மாணவி சாருமதி 576 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உயிரியலில் 7 பேர், கணினி அறிவியலில் 1 மாணவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
570க்கு மேல் 7 பேர், 551 முதல் 570 வரை 9 பேர், 501 முதல் 550 வரை 11 பேர், 450 முதல் 500 வரை 12 பேர், 450க்கு மேல் ஒருவர் மதிப்பெண் பெற்றனர். தேர்வில் சாதித்த மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், நிர்வாக குழு சார்பில், மேலாண்மை இயக்குநர் (பாடத்திட்டங்கள்) முத்துக்குமரன், பள்ளி நிர்வாகி ரத்தினசுப்ரமணியர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
அறக்கட்டளை பொருளாளர் சரவணன், பள்ளியின் முதன்மை கல்வி ஆலோசகர் செல்வராஜ், தலைமை ஆசிரியை கவிதா, அறக்கட்டளை உறுப்பினர் குணசேகர், ஒருங்கிணைப்பாளர் வேல்விழி உடனிருந்தனர்.