ADDED : நவ 07, 2025 12:49 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 494 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் துரைமணிராஜன் ஆசிரியர் தலைமை தாங்கினார். புவனகிரி வட்டார மேற்பார்வையாளர் அருள்சங்கு வரவேற்றார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு காரணமான, தலைமை ஆசிரியர் லதாவை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.
காமராஜர் மக்கள் நலப்பேரவை பட்டிமன்ற பேச்சாளர் மோகன்தாஸ், எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
குருராம் சிமெண்ட் ஒர்க்ஸ் உரிமையாளர் சேகர், 494 மதிப்பெண் பெற்ற மாணவர் ஆகாஷிற்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

