/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம மக்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற மறுப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
/
கிராம மக்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற மறுப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கிராம மக்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற மறுப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கிராம மக்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற மறுப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ADDED : நவ 07, 2025 12:49 AM

பண்ருட்டி: எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக மாற்றிட வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்ப படிவத்தை பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் வருவாய் கிராமம் சிறுவத்துார், சேமக்கோட்டை ஊராட்சி எல்லைகளில் வருகிறது.
இந்நிலையில், எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக உருவாக்கிட வேண்டும் என கடந்த எம்.எல்.ஏ., எம்.பி.,தேர்தலில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து, தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் சார்பில் எஸ்.ஐ.ஆர்.படிவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
இதில் எஸ்.ஏரிப்பாளையம் பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக மா ற்றாததால் படிவம் பெற மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து பெறவில்லை.
அதே கிராமத்தில், சில பகுதிகளில் மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபதி, மண்டல துணை தாசில்தார் கரிகாலன், வருவாய் ஆய்வாளர் வேணுகோபால், மண்டல துணை பி.டி.ஓ., தேன்மொழி, புதுப்பேட்டை போலீசார் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .
கால அவகாசத்திற்கு பிறகு பெற்றுக்கொள்ளவதாக மக்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை, போலீசார் கலைந்து சென்றனர்.

