ADDED : டிச 18, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: மாநில அளவில் நடந்த ஓவிய போட்டியில், முதலிடம் பிடித்த மாணவியை ஆசிரியர்கள் பாாரட்டினர்.
தமிழக அரசின் தமிழ் வ ளர்ச்சித் துறை சார்பில், 'செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்' சார்பில், சென்னையில் மாநில அளவிலான ஓவியப்போட்டி நடந்தது .
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஹரிஷா பங்கேற்று, முதலிடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவி ஹரிஷாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் பாராட்டினார். முதுநிலை ஆசிரியர் நளினி, ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

