ADDED : டிச 18, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: அபிதாபியில், சர்வதேச அளவிலான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற சீனியர் குத்துசண்டை போட்டி நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த, 12 பேர் உட்பட, இந்தியா சார்பில் 40 பேர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சுபாஷினி, அரியலுார் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த எழில்பாத்திமா ஆகிய கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு காலிறுதி சுற்று வரை பங்கேற்று திரும்பினர்.
சர்வதேச அளவில் நடந்த இந்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப் மற்றும் கடலுார், அரியலுார் மாவட்ட கிக் பாக்சிங் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

