/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு பாராட்டு
/
கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு பாராட்டு
ADDED : ஆக 16, 2025 11:40 PM

கடலுார்: கடலுார் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துமனை நிர்வாகத்தை பாராட்டி சுதந்திர தின விழாவில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்வழங்கினார்.
கடலுார் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனையில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்புற்றுநோயாளிகளுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இதைப்பாராட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கிருஷ்ணாபுற்றுநோய் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணாவிற்கு சான்றிதழ் வழங்கினார்.