/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
கிருஷ்ணசாமி எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணசாமி எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணசாமி எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 10, 2025 12:25 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆப் எக்ஸலன்ஸ் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
கடலுார் அடுத்த எஸ்.குமராபுரம் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆப் எக்ஸலன்ஸ் மாணவி மோனிகா, பிளஸ் 2 தேர்வில் 600க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் சண்முகவேல் 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தீபிகா 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
101 மாணவர்களில் 92 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி தீபிகா கணிதம் பாடத்திலும், மாணவி மோனிகா கணக்கு பதிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ராஜேந்திரன், முதல் பரிசாக 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கி பாராட்டினார்.
பள்ளி முதல்வர் சாந்தி பாண்டியன், பள்ளி முதன்மை இயக்குனர் டாக்டர் சிரிஷா கண்ணன், டாக்டர் கண்ணன் ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களை பாராட்டினர்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மாலா நடராசன், முத்துகிருஷ்ணன் உடனிருந்தனர்.