ADDED : செப் 03, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், செப். 4–
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணி நடந்தது.
பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த பணிக்கு, மருத்துவர் சரண்யா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சரண்ராஜ், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுவினால் பரவும் நோய்கள் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள், குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு, காய்ச்சல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, தொழுநோய் விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது.
