UPDATED : அக் 09, 2026 03:43 PM
ADDED : அக் 09, 2026 03:06 PM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு பணி நடந்தது.
மாவட்ட மருத்துவ அலுவலர் ராஜா, மாவட்ட மலேரியா அலுவலர் கணபதி அறிவுறுத்தலின்பேரில் நடந்த முகாமிற்கு, மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மங்களூர் பி.டி.ஓ., சண்முகசிகாமணி, துணை பி.டி.ஓ., பழனிமுத்து முன்னிலை வகித்தனர்.
ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்த், வட்டார சுகாதார ஆய்வாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், அபினேஷ், மதனகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு, காய்ச்சல் கண்காணிப்பு, குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு செய்து, புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலர் அமிர்தலிங்கம், டெங்கு களப்பணியாளர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, கிராம மக்களுக்கு சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
