/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுநகர் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
முதுநகர் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
முதுநகர் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
முதுநகர் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 18, 2025 05:02 AM

கடலுார்: கடலுார், முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
கடலுார், முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநகர், குமரக்கோவில் தெரு குருதேவ் ஜூவல்லரி சார்பில் உரிமையாளர்கள் சந்திரக்குமார், தர்ஷன், யோகித் ஆகியோர் மாணவியருக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் பாலமுருகன் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.