ADDED : டிச 20, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கோவிலில் விபூதி மடிக்கும்போது, பூசாரி மயங்கி விழுந்து இறந்தார்.
சிதம்பரம் அடுத்த ஏ.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 55; சி.முட்லுார் பரதேசிப்பர் கோவில் பூசாரி. இவர் நேற்று கோவிலில் விபூதி மடித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
இதுகுறித்து, சுப்ரமணியன் மகன் சுபசீலன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீ சார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

