/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரதமர் கிசான் கோதிஸ் திட்ட பயிற்சி
/
பிரதமர் கிசான் கோதிஸ் திட்ட பயிற்சி
ADDED : நவ 14, 2025 11:32 PM

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த வி.சாத்தமங்கலம் கிராம விவசாயிகளுக்கு, பிரதமர் கிசான் கோதிஸ் திட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தோட்டக்கலை துணை அலுவலர் விஸ்வநாதன், கால்நடை மருத்துவர் பிரகாஷ், வேளாண் பொறியியல்துறை அண்ணாசாமி, வேளாண்மை விற்பனைத்துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அதில், பிரதமரின் கிசான் கோதிஸ் திட்டம் வாயிலாக சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவியை மூன்று தவணைகளாக பெறுவது மற்றும் திட்டம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

