/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு செய்ய அவகாசம்: விவசாயிகள் கோரிக்கை
/
பயிர் காப்பீடு செய்ய அவகாசம்: விவசாயிகள் கோரிக்கை
பயிர் காப்பீடு செய்ய அவகாசம்: விவசாயிகள் கோரிக்கை
பயிர் காப்பீடு செய்ய அவகாசம்: விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 14, 2025 11:31 PM
காட்டுமன்னார்கோவில்: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா பருவ நெல் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் உட்பட, கடலுார் மாவட்டத்தில் 2.5 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் சாகுபடி பயிர்கள் புயல், வெள்ளம், இயற்கை இடர்ப்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆண்டுதோறும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்கின்றனர்.
இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய, இன்று கடைசி நாள் என அரசு அறிவிப்பு செய்துள்ளது.
மாவட்டத்தில் பல காரணங்களால் இன்னும் அதிகளவு விவசாயிகள் காப்பீடு செய்யாமல் உள்ளனர். அதனால் காப்பீடு செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

