/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1,586 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
1,586 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : நவ 14, 2025 11:31 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த விழாவில், 1,586 மாணவர்களுக்கு அமைச்சர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத்தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., துரைபாண்டியன் வரவேற்றார்.
விழாவில், 1,586 மா ணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கணேசன் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:
கிராமப்புற மாணவர்களை முன்னுக்கு கொண்டு வரும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். கடலுார் மாவட்ட மாணவர்களுக்கு 9.82 கோடி ரூபாய்க்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில், 51.19 கோடி ரூபாயில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 45 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளிக்கு தினசரி வந்து செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, தாசில்தார் அரவிந்தன், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 10 பள்ளிகளை சேர்ந்த 1,586 மாணவ, மாணவிகள் பயனடைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் நன்றி கூறினார்.

