/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜன 06, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை, : கிள்ளையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது
துணைச் சேர்மன் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். சிதம்பரம் குடிமைப்பொருள் தாசில்தார் தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) பஞ்சாபகேசன், மின்சாரத்துறை உதவி இயக்குனர் மோகன்காந்தி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில், 13 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.
கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டியன், கலைமணி, மதுரைச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி மலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.