/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை போட்டி: கிருஷ்ணசாமி பள்ளி சாதனை
/
முதல்வர் கோப்பை போட்டி: கிருஷ்ணசாமி பள்ளி சாதனை
ADDED : அக் 09, 2024 05:43 AM

கடலுார் : தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் மால்வின் ஜோசுவா, முதல்வர் கோப்பைக்கான 14வயதுக்குட்பட்டோருக்கான செஸ் விளையாட்டில் மாநில
அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், கிருஷ்ணகிரியில் நடந்த தேசிய
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அகில இந்திய போட்டிக்கு தகுதிபெற்றார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர் வேல்முருகன், சிதம்பரத்தில் நடந்த மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான இறகு பந்து போட்டியில் வெற்றிபெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா பள்ளியில் நடந்தது. சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பள்ளி முதல்வர் நடராஜன் பாராட்டினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிரிஸ்டினா பிளாரன்ஸ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.