தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செராமிக் கம்பெனியில் அச்சு இயந்திரம் திருட்டு

செராமிக் கம்பெனியில் அச்சு இயந்திரம் திருட்டு

செராமிக் கம்பெனியில் அச்சு இயந்திரம் திருட்டு


ADDED : செப் 15, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பூட்டிக்கிடந்த தனியார் செராமிக் கம்பெனியின் கதவை உடைத்து, அச்சு மற்றும் வெல்டிங் இயந்திரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

விருத்தாசலம், எம்.ஆர்.கே.,  நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான செராமிக் கம்பெனியில் மண் மற்றும் பீங்கான் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக செராமிக் கம்பெனி மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை செராமிக் கம்பெனி கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த ஆறுமுகம் மகன் செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அச்சு இயந்திரம் மற்றும் வெல்டிக் மெஷின்கள் திருடு போயிருந்தது.

புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us